/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தனியார் பள்ளி விடுதி வார்டன் கைது
/
மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தனியார் பள்ளி விடுதி வார்டன் கைது
மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தனியார் பள்ளி விடுதி வார்டன் கைது
மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தனியார் பள்ளி விடுதி வார்டன் கைது
ADDED : நவ 14, 2024 07:36 AM
தாராபுரம்: தாராபுரத்தில் தனியார் பள்ளி மாணவர்களிடம், பாலியல் ரீதியாக அத்துமீறிய, விடுதி வார்டனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், பூளவாடி சாலையில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளி விடுதியில், மாணவர்களை விடுதி வார்டன் பாலியல் ரீதியாக சித்ரவதை செய்வதாக, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் சென்றது.
இதையடுத்து ரக-சிய விசாரணை நடந்தது. இதில், 16 வயதுக்குட்பட்ட, 15க்கும் மேற்பட்ட மாணவர்களிடம், விடுதி வார்டனான மதுரை, திருமங்-கலத்தை சேர்ந்த சரண், 25, பாலியல் ரீதியாக துன்புறுத்தியது
தெரியவந்தது. இதை தொடர்ந்து குழந்தை பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரின்படி, விடுதி வார்டன் சரண் மீது, போக்சோ சட்-டத்தில் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்-தனர். மாணவர்கள் புகார்
தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்-காத ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த விடுதி தலைமை காப்பாளர் ராம்பாபு, 34; பள்ளி தாளாளர் சுரேஷ்குமார், 50, ஆகி-யோரையும் போலீசார் கைது செய்தனர்.