/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
/
இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : செப் 20, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்று தனியார் துறை
வேலைவாய்ப்பு முகாம்
ஈரோடு, செப். 20-
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் ஒவ்வொரு மாதமும், மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி இன்று காலை, 10:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முகாம் நடக்க உள்ளது. செவிலியர், டெய்லர், கணினி ஆப்ரேட்டர், தட்டச்சு செய்பவர், ஓட்டுனர் உட்பட பல்வேறு பணிகளுக்கு படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.