/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வைராபாளையம் டி.பி.சி.,ல் 600 டன் நெல் கொள்முதல்
/
வைராபாளையம் டி.பி.சி.,ல் 600 டன் நெல் கொள்முதல்
ADDED : மே 30, 2025 12:59 AM
ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்தில், நெல் அறுவடை நடந்து வருகிறது. இதற்காக வைராபாளையம் மற்றும் கணபதிபாளையத்தில், அரசு நேரடி மையம் அமைக்கப்பட்டு நெல் கொள்முதல் நடக்கிறது.
அறுவடை செய்யப்படும் நெல்லை உலர்த்தி கல், மண், துாசி நீக்கி, 40 கிலோ மூட்டையாக பிடித்து கொள்முதலுக்கு அனுப்புகின்றனர். வைராபாளையம் நெல் கொள்முதல் நிலையம் கடந்த, 6ம் தேதி முதல் செயல்படுகிறது. இங்கு சன்ன ரகம் குவிண்டால், 2,450 ரூபாய், குண்டு ரகம், 2,405 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. தினமும் சராசரியாக, 20 முதல், 40 டன் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த, 6ம் தேதி முதல் தற்போது வரை, 600 டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.

