ADDED : ஆக 24, 2025 12:38 AM
கோபி:மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை, போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், கோபி, ஒட்டவலவை சேர்ந்தவர் ருக்மணி, 33; கணவர் பூபதி; இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். பூபதி இறந்ததால், தாளவாடியில் பெற்றோர் வீட்டில் ருக்மணி வசித்தார். மனைவியை பிரிந்த அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் பார்த்திபன், 47, என்பவரை, ருக்மணி இரண்டாவது திருமணம் செய்தார்.
குழந்தைகளை, பூபதியின் பெற்றோர் அழைத்து சென்றனர். தற்போது ருக்மணிக்கு, 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. பார்த்திபன் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து ஊதாரித்தனமாக சுற்றினார். இதில், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
ருக்மணியின் தாய் கொடுத்த பொலீரோ காரை அடமானம் வைத்து மது குடித்ததை தட்டிக்கேட்ட தகராறில், நேற்று முன்தினம் மாலை, ருக்மணியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி பார்த்திபன் கொலை செய்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.