/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.7.70 லட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனை
/
ரூ.7.70 லட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனை
ADDED : மே 01, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடுமொடக்குறிச்சி, உப ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 22,779 தேங்காய்கள் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ தேங்காய், 34.89 முதல், 62.91 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 7,889 கிலோ தேங்காய்கள், 4 லட்சத்து, 180 ரூபாய்க்கு விற்பனையானது.
கொப்பரை தேங்காய் முதல் தரம் ஒரு கிலோ, 168.90 முதல், 183.45 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 90 முதல், 145.99 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மொத்தம், 2,197 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், 3 லட்சத்து, 69,917 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய் ஆகியவை சேர்ந்து, 7 லட்சத்து, 70,097 ரூபாய்க்கு விற்பனையானது.