/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட ஆய்வு
/
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட ஆய்வு
ADDED : நவ 21, 2024 06:30 AM
ஈரோடு: மொடக்குறிச்சி தாலுகாவில், நேற்று 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பல்வேறு அரசு அலுவலகங்களில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
நேற்று காலை, 9:00 முதல் இன்று காலை, 9:00 மணி வரை நடக்கும் ஆய்வில், எழுமாத்துார் கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, தடுப்பூசி, மருந்து இருப்புகளை ஆய்வு செய்தார். பல்வேறு பகுதி ஆய்-வுக்கு பின், மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்க-ளிடம் மனுக்களை பெற்றார். பின், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூடுதல் கலெக்டர் சதீஸ், டி.ஆர்.ஓ., சாந்தகுமார், ஆர்.டி.ஓ., ரவி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பழனிவேல், பயிற்சி துணை கலெக்டர் சிவப்பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

