/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி முன்னேற்பாடுகளை உறுதிப்படுத்த யோசனை
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி முன்னேற்பாடுகளை உறுதிப்படுத்த யோசனை
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி முன்னேற்பாடுகளை உறுதிப்படுத்த யோசனை
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி முன்னேற்பாடுகளை உறுதிப்படுத்த யோசனை
ADDED : ஜூலை 31, 2025 01:53 AM
ஈரோடு, ஈரோடு கலெக்டர் கந்தசாமி தலைமையில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்துவது பற்றிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை
கூட்டம் நடந்தது.
தேசிய போட்டிகளுக்கு இணையாக நடத்த வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என, 5 பிரிவுகளில், 37 விளையாட்டு, 53 வகைகளில் மாவட்ட, மண்டல, மாநில அளவில் போட்டி நடத்தப்படுகிறது.
மாவட்ட போட்டியில் முதல், 3 பரிசு பெறுவோருக்கு, 3,000, 2,000, 1,000 ரூபாய் பரிசு, சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும். மாநில அளவில் தனி நபர் போட்டிகளில் வெல்வோருக்கு முதல், 3 பரிசாக, 1 லட்சம், 75,000, 50,000 ரூபாய் வழங்கப்படும். குழு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, 75,000, 50,000, 25,000 ரூபாய் பரிசு தொகை, சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழ் மூலம் உயர் கல்வி, வேலைவாய்ப்பில் சலுகை வழங்கப்படும்.ஈரோடு மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பிற பிரிவினர் https://sdat.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யலாம். மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு ஆக., 16 மாலை, 6:00 மணி வரை முன்பதிவு செய்யலாம்.
இணைய தளம் மூலம் பதிவு செய்தோர் மட்டும் போட்டிகளில் பங்கேற்க இயலும். போட்டிகளுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு
களையும் உறுதி செய்ய வேண்டும் என, கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் அர்பித் ஜெயின் உட்பட பலர்
பங்கேற்றனர்.