/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிராமசபை கூட்டங்களில் இளைஞர்கள் பங்கேற்க யோசனை
/
கிராமசபை கூட்டங்களில் இளைஞர்கள் பங்கேற்க யோசனை
ADDED : ஆக 16, 2025 01:44 AM
ஈரோடு,ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 225 பஞ்.,களிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.
ஈரோடு யூனியன், கதிரம்பட்டி பஞ்., நஞ்சனா
புரத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர் கந்தசாமி பேசியதாவது:
பஞ்.,களில் நடந்து வரும் பணிகள், பொது நிதி, பிற திட்ட நிதிகள் எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள், இளைஞர்கள், இதுபோன்ற கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று அறிய வேண்டும். தங்கள் பகுதிக்கு தேவையான வளர்ச்சி திட்டப்பணிகளை கோர வேண்டும்.
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், ஜல் ஜீவன் திட்டம், எய்ட்ஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு போன்றவற்றை கிராம மக்கள் கவனித்து, செயல்பாடுகளை உறுதி செய்ய வேண்டும். கிராம பகுதியை துாய்மையாக வைத்திருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். எம்.எல்.ஏ., சந்திரகுமார், பயிற்சி உதவி கலெக்டர் காஞ்சன்சவுத்ரி, உதவி இயக்குனர் (பஞ்.,கள்) உமாசங்கர், மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி, தோட்டக்கலை துணை இயக்குனர் குருசரஸ்வதி உட்பட பலர் பங்கேற்றனர்.