/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குழந்தைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்தினால் வழக்கு
/
குழந்தைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்தினால் வழக்கு
ADDED : ஜன 09, 2025 07:37 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்-கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆலோ-சனை கூட்டம் நடந்தது. இதில் அதிகாரிகள் பேசிய விபரம்:
நடத்தை விதிக்கான அதிகாரி பிரேமலதா: வாக்காளர்களிடம் ஜாதி, மதம், மொழி, இன ரீதியாக வேறுபடுத்தியோ, அணு-கியோ ஓட்டு சேகரிக்க கூடாது. பொருள், பணம் உள்ளிட்ட கையூட்டு வழங்கக்கூடாது. வாக்காளர்களை ஓட்டுப்போட வாக-னங்களில் அழைத்து செல்லுதல் கூடாது. மத வழிபாட்டு தலங்-களில் பிரசாரம் செய்யக்கூடாது. கூட்டம், ஊர்வலம் போன்றவை-களை அரசியல் கட்சிகள் முன் கூட்டியே, அனுமதி பெற்று நடத்த வேண்டும். தனி நபர் விமர்சனம், வீடுகளின் முன் போராட்டம் நடத்தக்கூடாது. ஒலி பெருக்கிகளை இரவு, 10:00 முதல் காலை, 6:00 மணி வரை பயன்படுத்தக்கூடாது. 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கப்பணம், 10,000 ரூபாய்க்கு மேலான மதிப்பில் பொருட்களை ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லக்கூடாது. குழந்தைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்துதல், கட்சி கொடிகள் போன்றவற்றை கொடுத்து அழைத்து சென்றால் வழக்-குப்பதிவு செய்யப்படும்.
டி.ஆர்.ஓ., சாந்தகுமார்: அனுமதி பெறாமல் விளம்பரம் செய்யக்-கூடாது. கூட்டம், பிரசார பேரணி, ஊர்வலங்களின்போது, அனு-மதி பெற்ற எண்ணிக்கையிலானவர்களை மட்டுமே அழைத்து செல்ல வேண்டும்.
தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ்: வரும், 10 முதல், 17ம் தேதிக்குள், 10, 13, 17 ஆகிய நாட்களில் காலை, 11:00 முதல் மதியம், 3:00 மணி வரை மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்-யலாம். 100 மீட்டர் வரை மூன்று வாகனங்களில் வந்து, வேட்பு மனு தாக்கல் செய்யும் அறைக்குள் வேட்பாளர் உட்பட, 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா: வேட்பாளர்கள், தங்களது செலவு கணக்குகளை உரிய நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலில் மூன்று வேட்பாளர்கள், குறித்த நாளில் கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதுபற்றி தேர்தல் ஆணைய உத்தரவுப்படி அவர்கள், மூன்று பேரும் தேர்-தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, இத்தேர்தலில், முறையாக கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த, 10 ஆண்டுகளுக்குள் எம்.எல்.ஏ., - எம்.பி.,யாக இருந்த-வர்கள், தங்கள் பதவி காலத்தில் பயன்படுத்திய அறை உள்ளிட்ட செலவினங்களில், 'பாக்கி இல்லை' என்ற சான்று தாக்கல் செய்ய வேண்டும். குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ள வேட்பாளர், அது பற்றி மூன்று செய்தி விளம்பரங்களை வெளியிட வேண்டும்.இவ்வாறு பேசினர்.
தி.மு.க., சார்பில் சந்திரசேகர், காங்., விஜயபாஸ்கர், அ.தி.மு.க., சோழா லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

