/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குட்கா பொருள் விற்பனை கடைக்காரர்களுக்கு காப்பு
/
குட்கா பொருள் விற்பனை கடைக்காரர்களுக்கு காப்பு
ADDED : ஜூன் 16, 2025 03:44 AM
பவானி: சித்தோடு அருகே கருங்கல்பாளையம், விநாயகர் கோவில் வீதியில், ஒரு மளிகை கடையில் புகையிலை பொருள் விற்பதாக கிடைத்த தகவலின்படி, சித்தோடு போலீசார் சோதனை செய்-தனர். இதில், 900 கிராம் ஹான்ஸ், 300 கிராம் கூல்-லிப் புகை-யிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாள-ரான சண்முகம், 41, என்பவரை கைது செய்தனர். இதேபோல் நசி-யனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில், 10 ஹான்ஸ் பாக்கெட்டு
களை பறிமுதல் செய்தனர்.
* ஈரோடு, சூரம்பட்டி நால்ரோடு ஆர்.கே.பேக்கரியில், அரசு மருத்துவமனை போலீசார் சோதனை நடத்தினர். இதில் ஹான்ஸ், 31 பாக்கெட், விமல் பான் மசாலா, 81 பாக்கெட், கூல் லீப், 20 பாக்கெட், வி-1 புகையிலை, 81 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் ராம
கிருஷ்ணனை, 47, கைது செய்தனர்.