/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்சோ வழக்கில் தேடப்பட்டவருக்கு காப்பு
/
போக்சோ வழக்கில் தேடப்பட்டவருக்கு காப்பு
ADDED : அக் 31, 2024 06:23 AM
ஈரோடு: போக்சோ வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 15 வயது சிறு-மியை, கூலி தொழிலாளியான நாமக்கல் மாவட்டம், பல்லக்காபாளையத்தை சேர்ந்த செந்தில் குமார், 43, பாலியல் பலாத்காரம் செய்-துள்ளார். அவரது மனைவி இந்திராணி, 30, உடந்-தையாக இருந்துள்ளார்.
இந்திராணியின் ஆண் நண்பர்களான ப.வேலுார் சோழசி ராமணியை சேர்ந்த ரமேஷ், 44, வினோத்குமார், அரவிந்த், சுதாகர் ஆகியோரும் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்-தது.இது தொடர்பாக செந்தில்குமார், இந்திராணி, ரமேஷ் ஆகிய மூவரை ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போக்சோ வழக்கில் தேடப்பட்டு வரும், கடலுார் மாவட்டம் விருதாசலம் வாசு மகன் வினோத்கு-மாரை, 36, திருப்பூரில் கிரைம் போலீசார் கைது செய்தனர். வினோத்குமாரை, ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் க்ரைம் போலீசார் ஒப்படைத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி வினோத்குமார், ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.