ADDED : ஜூன் 06, 2026 04:22 AM
சத்தியமங்கலம்:பவானிசாகர்
அணையில் விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் அள்ளிக் கொள்ள அரசு
அனுமதித்துள்ளது. ஆனால் விவசாயி களுக்கு தேவையில்லாத
கட்டுப்பாடுகளை விதித்து, ஒரு நாளைக்கு, 100 வாகனங்களுக்கு மட்டுமே
அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் கட்டுப்பாடு
விதித்துள்ளனர்.
சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலரின்
நடவடிக்கையை கண்டித்தும், கட்டுப்பாடுகளின்றி அனைத்து
வாகனங்களுக்கும் மண் எடுக்க அனுமதி கோரி, தமிழக விவசாயிகள்
பாதுகாப்பு சங்கம் சார்பில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் சத்தி மாவட்ட வன
அலுவலகம் முன் நேற்று காலை முதல் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இவர்களுக்கு
ஆதரவாக பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பண்ணாரியும் கலந்து
கொண்டார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பல்வேறு பகுதி
நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உட்பட, மாவட்ட, மாநில நிர்வாகிகளும்
பங்கேற்றுள்ளனர். காலை, 11:00 மணிக்கு தொடங்கிய போராட்டம், இரவிலும்
நீடித்தது. இந்த போராட்டத்தில், 15 விவசாயிகள் உண்ணாவிரதத்திலும்
ஈடுபட்டுள்ளனர்.
