ADDED : ஆக 25, 2026 05:36 AM
அ நிறம் | அளவு
பவானி; அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை கேட் பகுதியில், ஆவின் பால் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட விவசாயிக-ளிடம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி, 30க்கும் மேற்பட்ட விவசாயிகள், தாங்கள் எடுத்து வந்த பாலை, கொள்முதல் நிலையத்தின் முன் சாலையில் ஊற்றி, நுாதன ஆர்ப்பாட்டத்தில் ஈடு-பட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: அனைத்து விதமான பொருட்களின் விலைகளும் ஏறி விட்டன. சமீபத்தில் தமிழக அரசு ஆவின் பால் கொள்முதல் விலையை, 35 ரூபாயில் இருந்து 38 ரூபாயாக உயர்த்தினாலும் போதுமா-னதாக இல்லை. பால் கொள்முதல் விலையை, 44 ரூபாயாக உயர்த்த வேண்டும். இவ்வாறு கூறினர்.
