குப்பையை 26 வகையாக பிரிக்க நிர்ப்பந்தம் துாய்மை பணியாளர்கள் குமுறல்
குப்பையை 26 வகையாக பிரிக்க நிர்ப்பந்தம் துாய்மை பணியாளர்கள் குமுறல்
ADDED : ஆக 25, 2026 05:37 AM
ஈரோடு; ஈரோடு மாவட்ட உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் - ஏ.ஐ.டி.யு.சி., தலைவர் சின்னசாமி, பொதுச் செயலர் மணியன் தலைமையில், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம், வழங்கிய மனுவில் கூறியதாவது:
மாநகராட்சியில் வீடுகளில் சேகரமாகும் கழிவு-களை, பால், எண்ணெய் கவர்கள், பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் பூ மாலை, மாத்திரை அட்டை, சிரப் திரவ பாட்டில், மருந்து பாட்டில் மூடி, குளுக்கோஸ் பை மற்றும் குழாய்கள், ஊசிகள், தண்ணீர் பாட்டில்கள், வாசல் மிதியடி, வண்ண துாரிகை, மெத்தை, தலையணை, பஞ்சு, துணியால் ஆன பொம்மை, டயர், டியூப், அட்டை, அட்டையால் ஆன பெட்டி, தெர்மாகோல், பேக்கிங் ஸ்பான்ஞ், காலி மது பாட்டில், காலி மதுபாட்டில் மூடி என, 26 வகையாக பிரிக்க மாநகராட்சி சுகா-தார அலுவலர், மேற்பார்வையாளர்கள், துாய்மை பணியாளர்களை நிர்ப்பந்தம் செய்கின்றனர். கழி-வுகளை பிரித்து வழங்க கோரலாம். இவ்வாறு பிரிப்பது நடைமுறை சாத்தியமற்றது.தொழிலாளர் மத்தியில் பதற்றம், அதிருப்தி ஏற்-பட்டுள்ளது. மக்களே மக்கும், மக்காத குப்பை என பிரித்து வழங்க மாநகராட்சி நிர்வாகம் உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
