/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கல் குவாரிக்கு எதிர்ப்பு கலெக்டர் ஆபீசில் தர்ணா
/
கல் குவாரிக்கு எதிர்ப்பு கலெக்டர் ஆபீசில் தர்ணா
ADDED : செப் 27, 2025 01:40 AM
ஈரோடு, கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ௪௦௦க்கும் மேற்பட்ட மக்கள் கலெக்டர் அலுவ லகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம் தாலுகா மாராயிபாளையம் கிராமத்தில், புதிதாக கல் குவாரி அமைக்க சிலர் அனுமதி கோரி உள்ளனர். அதற்கான பணி முடிந்து விரைவில் குவாரி துவங்க உள்ளதாக அறிந்தனர். இதனால் சத்தியமங்கலம் தாலுகா மாதம்பாளையம், பனையம்பள்ளி, கணக்கரசன்பாளையம், மாராயிபாளையம், ஆனைகட்டி, இந்திரா நகர், பருசபாளையம், பஜங்கனுார், மல்லியம்பட்டி, வெங்கநாயக்கன்பாளையம், தாசம்பாளையம் கிராமத்தை சேர்ந்த, பல நுாறு குடும்பத்தினர் விவசாயம் செய்ய இயலாது என்றும், வீடுகள், பிற நிலங்கள் பாதிக்கும் என அஞ்சுகின்றனர்.
கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை கடிதம், முதல்வரின் தனிப்பிரிவு உட்பட பல்வேறு துறைகளுக்கு அனுப்பி உள்ளனர். ஆறு ஏக்கரில் குவாரி அமைந்தால், 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்படுவர் என கருதுகின்றனர்.
குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு, 400க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று வந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கலெக்டர் கந்தசாமி மனுவை பெற்று, பேச்சுவார்த்தை நடத்தினார்.
மக்கள் கருத்து கேட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் குவாரி அமைக்கப்படாது. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால், மக்கள் கலைந்தனர்.