/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டாஸ்மாக் கடைக்கு ஈரோட்டில் எதிர்ப்பு
/
டாஸ்மாக் கடைக்கு ஈரோட்டில் எதிர்ப்பு
ADDED : அக் 28, 2025 01:42 AM
ஈரோடு, ஈரோடு, வைராபாளையம், வாட்டர் ஆபீஸ் சாலை பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது:
வைராபாளையம், வட்டர் ஆபீஸ் சாலை போன்ற இடங்கள் முற்றிலும் விவசாய நிலம் சார்ந்த குடியிருப்பு பகுதி. இங்கு வசிப்போர் தினசரி கூலி வேலை செய்வோர், பிற வேலைக்கு செல்வோராக உள்ளோம்.
இப்பகுதியில் இதுவரை டாஸ்மாக் கடை இல்லை. இந்நிலையில் வயல் வெளியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி பெற்று, அதற்கான பணி நடந்து வருகிறது. அவ்வாறு அமைந்தால், விவசாய நிலங்களுக்குள் பாட்டில்களை வீசி சென்றால் விவசாயிகள் பாதிப்பர். கடை பகுதி வழியாக செல்லும்போது தேவையற்ற பிரச்னை ஏற்படும். எனவே டாஸ்மாக் கடை அமைக்க கூடாது.
இவ்வாறு மக்கள் கூறினர்.

