/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 18, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, மதுரை, ஆரப்பாளையத்தில் அரசு பஸ் டிரைவர் கணேஷை, உதவி மேலாளர் மாரிமுத்து காலணியால் தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஈரோட்டில் உள்ள காசிபாளையம் அரசு போக்குவரத்து பணிமனை அலுவலகம் முன், அண்ணா தொழிற்சங்கத்தின் போக்குவரத்து பிரிவு சார்பில், மண்டல செயலர் ராமசாமி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
டிரைவரை தாக்கிய உதவி மேலாளரை கைது செய்ய வேண்டும். அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும். அடுத்த இரு நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.