ADDED : ஜூன் 09, 2026 02:11 AM

வெள்ளகோவில்; வெள்ளகோவில் அருகே தனியார் காற்றாலை நிறுவனத்தின் மின்கம்பம் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளகோவில் பகுதியில் தனியார் காற்றாலை நிறுவனத்தின் சார்பில் பல இடத்தில் மின்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வெள்ள-கோவில் லக்குமநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்-பட்ட குறிச்சிவலசிலும் போராட்டம் நடந்து வரு-கிறது. ஆனால் மின் பாதை அமைக்க முயற்-சிக்கும் நிறுவனத்துக்கு ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக வேலை செய்வதை கண்-டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கேயம் தாசில்தார் கதிர்வேல், வி.ஏ.ஓ., நித்யா உள்ளிட்டோர், தனியார் காற்றாலை அதி-காரிகள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
