/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு மறியல்
/
பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு மறியல்
ADDED : ஆக 05, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகர், பவானிசாகரை அடுத்த கொத்தமங்கலம் பஞ்., பகுத்தம்பாளையம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதி மக்களுக்கு, பவானிசாகர் அணையில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 10 நாட்களாக சரிவர வினியோகிக்கவில்லை.
இந்நிலையில், 50க்கும் மேற்பட்ட பெண்கள், பகுத்தம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், கொத்தமங்கலம்-சத்தி சாலையில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். பவானிசாகர் போலீசார், யூனியன் அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்வதாக உறுதி கூறவே மறியலை கைவிட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

