/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வக்ப் சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
/
வக்ப் சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
வக்ப் சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
வக்ப் சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 19, 2025 02:16 AM
ஈரோடு::ஈரோடு, கருங்கல்பாளையம் காந்தி சிலை முன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில், வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் அஸ்கர் அலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முஹம்மது ஆரீப் துவக்கி வைத்தார். ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் முஹம்மது தாஜ் முஹைதீன், சித்திக், சண்முகம், மாரிமுத்து, சிந்தனை செல்வன் உட்பட பலர் பேசினர்.
இச்சட்ட திருத்தம், வக்ப் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியாகவும், முஸ்லிம்களின் உரிமைகள், நிலங்களை அபகரிக்கும் திருத்தமாகவும் இருக்கும். எனவே, இச்சட்ட திருத்தத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என, வலியுறுத்தினர்.