ADDED : அக் 22, 2026 06:51 AM

அந்தியூர்:அந்தியூர்
அருகே, செம்புளிச்சாம்பாளையம் அடுத்த சின்ன பருவாச்சியை
சேர்ந்தவர் விஜயன், 40; இவருக்கு சொந்தமான பட்டா நிலத்தின் பள்ளமான
பகுதியில், சாயக்கழிவுகளை கொட்டியுள்ளார்.
இதனால், சுற்று வட்டார
பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாரதார சீர்கேடு
ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து. மாவட்ட கலெக்டருக்கு
மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், நேற்று காலை
பவானி - அந்தியூர் சாலையில் செம்புளிச்சாம்பாளையம் பஸ் ஸ்டாப்பில்,
30க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். அந்தியூர் தாசில்தார்
சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், விரைவில் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.
இதனால், அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
