ADDED : அக் 22, 2026 06:51 AM

ஈரோடு,:ஈரோட்டில்,
கடந்த சில தினங்களாக காலை நேரத்தில் வெயிலின் தாக்கம் இருந்தாலும்,
மாலை, இரவு நேரங்களில் மழை பெய்கிறது.
நேற்று முன்தினம் மாலை முதலே
குளிர்காற்று வீசியது. இரவு 11:30 மணிக்கு லேசான சாரல் மழை
ஆரம்பித்தது. பின்னர் பலத்த காற்றுடன் கனமழையாக மாறி வெளுத்து
வாங்கியது. இந்த மழை ஒன்றரை மணி நேரத்திற்கு நீடித்தது. இதனால்
வீரப்பன்சத்திரம் பகுதியில், கழிவு நீருடன் மழை நீர் சூழ்ந்தது.
நள்ளிரவு நேரம் என்பதால் வாகன போக்குவரத்து குறைவாகவே இருந்ததால்
பாதிப்பு ஏற்படவில்லை.
அதேபோல் மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு,
மீனாட்சி சுந்தரனார் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர்
தேங்கியது. மாணிக்கம்பாளையம், பெரியவலசு, வீரப்பன்சத்திரம்
உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள்
சிரமப்பட்டனர். மழையால், நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம்
குறைந்திருந்தது.
அம்மாபேட்டையில் அதிக மழை
கடந்த சில
தினங்களாக பெய்து வரும் மழையால், கரும்பு, மஞ்சள், வாழை போன்ற
பயிர்களுக்கு உயிர் நீராக அமைந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி
தெரிவித்தனர். நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை
அம்மாபேட்டையில் அதிகபட்சமாக, 68.60 மி.மீ., மழை பெய்தது.
ஈரோடு-15, மொடக்
குறிச்சி-6, பெருந்துறை-61, சென்னிமலை-19,
பவானி-30.60, கவுந்தப்பாடி-24.40, கோபி-12.40, எலந்தகுட்டைமேடு-48,
கொடிவேரி-3, குண்டேரிபள்ளம்-2, நம்பியூர்-9, பவானிசாகர் அணை-27.60,
தாளவாடி-4.80 மி.மீ.,
மழை பதிவானது.
