/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுத்தையை பிடிக்க கோரி இன்று சென்னிமலையில் ஆர்ப்பாட்டம்
/
சிறுத்தையை பிடிக்க கோரி இன்று சென்னிமலையில் ஆர்ப்பாட்டம்
சிறுத்தையை பிடிக்க கோரி இன்று சென்னிமலையில் ஆர்ப்பாட்டம்
சிறுத்தையை பிடிக்க கோரி இன்று சென்னிமலையில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 31, 2025 04:30 AM
சென்னிமலை:சென்னிமலை
வனப்பகுதியை ஒட்டியுள்ள சில்லாங்காட்டுவலசு, குட்டக்காட்டில்
வசிப்பவர் குமாரசாமி மனைவி வளர்மதி. வனப்பகுதியை ஒட்டி நேற்று
முன்தினம் மதியம் ஆடுகளை மேய விட்டிருந்தார்.
அப்போது ஆடுகள்
அலறியபடி வந்ததால் அதிர்ச்சி அடைந்து, மேய்ந்து கொண்டிருந்த
பகுதிக்கு செவ்று பார்த்தார். அங்கு ஒரு ஆடு கழுத்தில் கடிபட்ட நிலையில்
இறந்து கிடந்தது. சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் பசுவபட்டி பிரிவு
அருகே, மலை வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியார் மண்டபத்துக்கு செல்லும்
வழியில் ஒரு மான் நேற்று மதியம் கடிபட்டு இறந்து கிடந்தது.
இரண்டுக்கும் சிறுத்தையே காரணம் என்று, அப்பகுதி மக்கள் மற்றும்
விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிறுத்தையை பிடிக்க
கோரி, எக்கட்டாம்பாளையம் ஊராட்சி சில்லங்காட்டுவலசு,
அய்யம்பாளையம், வெப்பிலி மக்கள், கிழக்கு வெப்பிலி, காங்கேயம்
சாலையில், இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால்
வனத்துறையினர், வருவாய் துறையினர், போலீசார், மக்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில்
முடிந்ததால், இன்று திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என்று மக்கள்
தெரிவித்தனர்.

