/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீட்டு மனை பட்டா கேட்டு வெயிலில் நின்று ஆர்ப்பாட்டம்
/
வீட்டு மனை பட்டா கேட்டு வெயிலில் நின்று ஆர்ப்பாட்டம்
வீட்டு மனை பட்டா கேட்டு வெயிலில் நின்று ஆர்ப்பாட்டம்
வீட்டு மனை பட்டா கேட்டு வெயிலில் நின்று ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 13, 2025 01:43 AM
பவானி அம்மாபேட்டை அருகே பூதப்பாடி பஞ்.,ல், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில், 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்கள்.
இவர்களில், 100 குடும்பத்தினருக்கு புலம் எண், 275-, வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. மீதி, 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும், இந்து சமய அறநிலையத்துறை தடையில்லா சான்று வழங்கியது. கடந்த, 1973ல் தடையில்லா சான்று வழங்கப்பட்ட நிலையில் இதுவரை வருவாய்த்துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் வீட்டுமனை பட்டா கேட்டு, அம்மாபேட்டை பஸ் நிறுத்த பகுதியில், நேற்று கொளுத்தும் வெயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.