/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தடையை மீறி ஆர்ப்பாட்டம்; அ.தி.மு.க.,வினர் கைது
/
தடையை மீறி ஆர்ப்பாட்டம்; அ.தி.மு.க.,வினர் கைது
ADDED : டிச 31, 2024 06:55 AM
ஈரோடு: அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், போலீசார் அனுமதி தரவில்லை.
தடையை மீறி அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, சிவசுப்பிரமணி, ஜெ.பேரவை மாநில துணை செயலாளர் வீரக்குமார், முன்னாள் மேயர் மல்லிகா உள்பட நுாற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். யார் அந்த சார்? பதாகையை பலர் கைகளில் பிடித்து வந்திருந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தி, 47 பெண்கள் உட்பட, 296 பேரை கைது செய்தனர்.
* சத்தி பஸ் ஸ்டாண்ட் அருகில், கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் தலைமையில், பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய அ.தி.மு.க.,வினர் திரண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதியில்லாத நிலையில், 500க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். * பவானி, அந்தியூர் பிரிவில், பவானி எம்.எல்.ஏ., கருப்பணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற, பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார், பவானி நகர செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.