/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பி.எஸ்.என்.எல்., ஊழியர் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
பி.எஸ்.என்.எல்., ஊழியர் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 03, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்கம், ஒப்பந்த தொழிலாளர் சங்கம், ஓய்வூதியர் சங்கத்தினர் இணைந்து, ஈரோடு டெலிபோன் பவன் முன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மகாராஷ்டிராவில் தன் விருப்ப ஓய்வு பெற்ற மலைவாழ் ஓய்வூதியர்களுக்கு ஜாதி சான்று சரிபார்ப்பை காரணம் காட்டி, ஐந்து ஆண்டாக ஓய்வூதிய பலன் வழங்காததை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைப்பு குழு தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் பாலு, பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.