/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தெங்குமரஹாடாவில் யானை தாக்கி பெண் பலி வனத்துறையை கண்டித்து சடலத்துடன் போராட்டம்
/
தெங்குமரஹாடாவில் யானை தாக்கி பெண் பலி வனத்துறையை கண்டித்து சடலத்துடன் போராட்டம்
தெங்குமரஹாடாவில் யானை தாக்கி பெண் பலி வனத்துறையை கண்டித்து சடலத்துடன் போராட்டம்
தெங்குமரஹாடாவில் யானை தாக்கி பெண் பலி வனத்துறையை கண்டித்து சடலத்துடன் போராட்டம்
ADDED : டிச 24, 2024 01:58 AM
பவானிசாகர், டிச. 24-
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டி, மாயாற்றின் கரையில், நீலகிரி மாவட்ட எல்லையில் தெங்குமரஹாடா வன கிராமம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டி கிராமம் உள்ளதால் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்கு கள் நடமாட்டம் அதிகமாக உள்ளன.
நேற்று முன்தினம் இரவு ஒற்றை யானை தெங்குமரஹாடா கிராமத்துக்குள் புகுந்தது. அப்போது லட்சுமி, 56, என்ற மூதாட்டி பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார். கூட்டுறவு சங்கம் அருகே காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் உடல் சிதறி பலியானார்.
சடலத்தை உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பு
வதற்காக வனத்துறை மற்றும் போலீசார் தெங்குமரஹாடா கிராமத்துக்கு நேற்று காலை வந்தனர். ஆனால், கிராம மக்கள், சடலத்தை எடுக்க விடாமல், இரு தரப்பினரையும் முற்றுகையிட்டு, சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'மாயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித் தர வேண்டும், காட்டுப்பன்றி, யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுவதால் உயிர் சேதம், பயிர் சேதம் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. உயிருக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க தவறிய வனத்துறையை கண்டிப்பதாகவும், இந்நிலை தொடர்ந்து நீடித்தால் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றும், வன கிராம மக்கள் தெரிவித்தனர்.
உரிய தீர்வு காண்பதாக வனத்துறை மற்றும் போலீசார் உறுதி கூறவே, மக்கள் கலைந்து சென்றனர். அதை தொடர்ந்து சடலத்தை மீட்ட போலீசார், உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் தெங்குமரஹாடா வன கிராமத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் பரபரப்பு நீடித்தது.