மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் 7ம் நாளாக பூனாட்சியில் போராட்டம்
மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் 7ம் நாளாக பூனாட்சியில் போராட்டம்
ADDED : அக் 13, 2026 06:08 AM
பவானி; அம்மாபேட்டை அருகே பூனாட்சி பஞ்.,ல், மர-வள்ளிக்கிழங்கு மாவு உற்பத்தி செய்யும் ஆலை மற்றும் எத்தனால் தயாரிக்கும் ஆலை செயல்-படுகிறது.
ஆலையில் இருந்து வெளியேற்றும் சுத்திகரிக்-கப்படாத கழிவு நீரால், சித்தார் ஓடை தண்ணீர், நிலத்தடி நீர் மாசடைந்து விட்டது. இதற்கு உரிய தீர்வு காணும் வரை, பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்ப மாட்டோம் என்று கூறி, கடந்த, 5ம் தேதி முதல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்-ளனர்.நத்தமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் தொடங்கிய போராட்-டத்துக்கு, ராமச்சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, செம்படாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் பெற்-றோரும் ஆதரவளித்து, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏழாவது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்தது. நிரந்தரமாக இந்த ஆலையை மூடினால் மட்டுமே, மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவோம் என்று பெற்றோர்களும், இப்பகுதி மக்களும் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
