/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நிலக்கடலை பயிருக்கு காப்பீடு வசதி செய்து தர வேண்டும்: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
/
நிலக்கடலை பயிருக்கு காப்பீடு வசதி செய்து தர வேண்டும்: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
நிலக்கடலை பயிருக்கு காப்பீடு வசதி செய்து தர வேண்டும்: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
நிலக்கடலை பயிருக்கு காப்பீடு வசதி செய்து தர வேண்டும்: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூன் 13, 2024 03:56 PM

ஈரோடு: காரீப் பருவம் துவங்கியுள்ள நிலையில் மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை பயிருக்கு காப்பீடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்று வட்டாரத்தில் 60 சதவீதக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மானாவாரி நிலங்களாக உள்ளன. இங்குள்ள 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வைகாசி மற்றும் ஆடிப்பட்டத்தில் கோடை மழையை பயன்படுத்தி நிலக்கடலை பயிரை விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். அதன்படி தற்போது நிலக்கடலை விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது காரீப் பருவம் துவங்கியுள்ள நிலையில் பயிர் காப்பீடு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆகவே மானாவாரி விவசாயிகள் நலன் கருதி நிலக்கடலை பயிருக்கு இன்சூரன்ஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்று வட்டார பகுதியில் தான் அதிகளவில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. உழவு, விதை நடவு, களையெடுத்தல், அறுவடை என 1 ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.
கடந்தாண்டு போதிய மழை இல்லாததால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. தற்போது கோடை மழை பெய்துள்ளதால் நிலக்கடலை விதைப்பு பணி துவங்கியுள்ளது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எந்தளவு பெய்யும் என தெரியவில்லை. ஆண்டுதோறும் ஜூன் மாதம் காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் நிலக்கடலை பயிருக்கு காப்பீடு திட்டம் குறித்த அறிவிப்பை மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து வெளியிடுவது வழக்கம்.
தற்போது காரீப் பருவம் துவங்கியுள்ள நிலையில் பயிர் காப்பீடு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆகவே மானாவாரி விவசாயிகள் நலன் கருதி நிலக்கடலை பயிருக்கு இன்சூரன்ஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.