/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
250 காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கல்
/
250 காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கல்
ADDED : டிச 05, 2024 07:35 AM
ஈரோடு: ஈரோடு, அரசு தலைமை மருத்துவமனை யில் உள்ள மாவட்ட காசநோய் மையத்தில், 'நிக்சய் மித்ரா' திட்டத்தில், நலிவடைந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள, காசநோயால் பாதித்தவர்களுக்கு ஊட்டச்சத்து மாவு அடங்கிய
பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்-தது.மாவட்ட துணை இயக்குனர் மற்றும் மருத்துவ பணிகள் (காசநோய்) டாக்டர்
ராமசந்திரன் தலைமை வகித்து, 250 நோயா-ளிகளுக்கு ஊட்டச்சத்து மாவு பைகளை வழங்கினார். ஒளிரும் ஈரோடு
பவுண்டேஷன் சார்பில், மாதம்தோறும் ஊட்டச்சத்து மாவு பைகளை வழங்கும் சேவையை அதன் தலைவர்
சின்ன-சாமி, வெங்கிடுசாமி ஆகியோர் தெரிவித்தனர். காசநோய் மைய மருத்துவ அலுவலர் சந்திரசேகரன்,
மாவட்ட காசநோய் மைய ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன், சுதன்சர்மா உட்பட பலர் பங்கேற்றனர்.