/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொத்தடிமை தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கல்
/
கொத்தடிமை தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கல்
ADDED : ஜன 15, 2026 05:07 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா முனியப்பம்பாளையம் பகுதி செங்கல் சூளைகளில், கொத்தடிமை தொழிலாளர்களாக கடலுார் மாவட்டத்தை சேர்ந்த, 6 தொழிலாளர்கள் கடந்த, 2019 டிச., 20ல் நடந்த கூட்டாய்வில் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு, 8.80 லட்சம் ரூபாய் இறுதி நிவாரணத்தொகையாக வழங்க கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார்.கொத்தடிமை தொழிலாளர்களாக மீட்கப்பட்ட மஹா, சின்ராசு, அஞ்சலை, ராணி, விஜி, பூங்கொடி ஆகியோருக்கு, 8.80 லட்சம் ரூபாயை டி.ஆர்.ஓ., சாந்தகுமார் வழங்கினார். தவிர கடந்த, 2021 பிப்., 9ல் தேசிய கூட்டாய்வில் மீட்கப்பட்ட ஒரு குழந்தை தொழி-லாளிக்கு, அரசின் பங்குத்தொகை, 15,000 ரூபாய், நீதிமன்-றத்தால் குழந்தை தொழிலாளியை பணிக்கு அமர்த்திய நிறுவன உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை, 30,000 ரூபாய் சேர்த்து, 45,000 ரூபாயை, அக்
குழந்தை பெயரில் வைப்பு நிதியாக வைத்து, வைப்பு நிதி சான்றை டி.ஆர்.ஓ., வழங்கினார். அக்குழந்தையின், 18 வயது நிறைவடையும்போது, அவருக்கு வழங்கப்பட உள்ளது.

