/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேசியக்கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவி வழங்கல்
/
தேசியக்கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஆக 16, 2025 01:42 AM
ஈரோடு, ஈரோடு, ஆணைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில், கலெக்டர் கந்தசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற அவர், மூவர்ண பலுான்களை பறக்கவிட்டார். பின், சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களது வாரிசுகள், மொழிப்போர் தியாகிகள், அவர்களது வாரிசுதாரர்கள் என, 79 பேருக்கு நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், சத்திய
மங்கலம் டி.எஸ்.பி., முத்தரசு உட்பட, 23 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதுபோல, வருவாய் பேரிடர் மேலாண்மை, தீயணைப்பு, மின்சாரம், அரசு போக்குவரத்து கழகம் என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி செய்த, 145 பேருக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். பிற துறைகள் மூலம், 40 பயனாளிகளுக்கு, 1.87 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.
எஸ்.பி., சுஜாதா, எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏ., சந்திரகுமார், பயிற்சி உதவி கலெக்டர் காஞ்சன் சவுத்ரி, டி.ஆர்.ஓ., சாந்தகுமார், ஆர்.டி.ஓ., சிந்துஜா உட்பட பலர் பங்கேற்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் மக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
* சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோபி ஆர்.டி.ஓ., ஆபீசில் சப்--கலெக்டர் சிவானந்தம் தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது கோபி கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய, 35 பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். அதேபோல் பர்கூர் மலைப்பகுதியில், மலைவாழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஈரோட்டை சேர்ந்த தனியார் சட்டக்
கல்லுாரி மாணவ, மாணவியருக்கு
சான்றிதழ் வழங்கினார்.
இதேபோல் கோபி தாலுகா ஆபீசில், தாசில்தார் சரவணன் தேசியக்கொடியேற்றி வைத்தார். கோபி நகராட்சி அலுவலகத்தில், சேர்மன் நாகராஜ் தேசியக்கொடியேற்றினார். கமிஷனர் சுபாஷினி, கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.
* அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கவியரசு, போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், யூனியன் அலுவலகத்தில் பி.டி.ஓ., சரவணன் ஆகியோர் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினர். அந்தியூர் பேரூராட்சியில் பாண்டியம்மாள், சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் ஜெகதீஸ் மற்றும் அந்தியூர் சுற்று வட்டார பள்ளியில் அந்தந்த தலைமையாசிரியர்கள் கொடியேற்றி மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
* பெருந்துறை அடுத்த, சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் ஜஸ்டின் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் காளியப்பன் தேசியக்கொடியை ஏற்றினார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சுண்டக்காம் பாளையம் பஞ்., முன்னாள் தலைவர் லோகநாதன், துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, பள்ளி எஸ்.எம்.சி தலைவர் சித்ரா, பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் பழனிசாமி உள்பட பலர்
பங்கேற்றனர்.
* சத்தியமங்கலம் வடக்கு பேட்டை
யில் நடந்த நிகழ்ச்சியில், துாய்மை காவலர்கள் தேசியக்கொடி ஏற்றினர். வடக்கு பேட்டை பகுதியில், புதிய உதயம் நண்பர்கள் மன்றம் சார்பில், பா.ஜ., நகர தலைவர் உமா கார்த்திகேயன் தலைமையில் கொண்டாப்பட்டது. பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கப்பட்டது.
* புன்செய்புளியம்பட்டி, நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், ட்ரீ அறக்கட்டளை சார்பில், மாணவ, மாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. சென்ற ஆண்டு வழங்கிய மரக்கன்றுகளை, நன்கு வளர்த்து பராமரித்த மாணவர்
களுக்கு பசுமை ஆர்வலர் விருது மற்றும் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.
* ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில், கமிஷனர் அர்பித் ஜெயின் தலைமையில், மேயர் நாகரத்தினம் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றார். மாநகராட்சி
யில், 25 ஆண்டுகள் பணியாற்றி வரும் துாய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ், 2,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. துணை மேயர் செல்வராஜ், துணை கமிஷனர் தனலட்சுமி உட்பட மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.