/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
4 பஞ்.,களுக்கு 17 மின்கல வாகனங்கள் வழங்கல்
/
4 பஞ்.,களுக்கு 17 மின்கல வாகனங்கள் வழங்கல்
ADDED : ஜூலை 10, 2025 01:34 AM
ஈரோடு, ஈரோடு யூனியன், மேட்டுநாசுவம்பாளையம் பஞ்.,ல், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தலா, 2.78 லட்சம் ரூபாய் மதிப்பில், 47.26 லட்சம் ரூபாயில், 4 பஞ்.,களுக்கு, 17 மின் கல வாகனங்களை வழங்கினார்.
எலவமலை பஞ்.,க்கு, 9 வாகனங்கள், மேட்டுநாசுவம்பாளையம் பஞ்.,க்கு, 5 வாகனங்கள், பேரோடு பஞ்.,க்கு, 1, பிச்சாண்டம்பாளையம் பஞ்.,க்கு, 2 என, 17 வாகனங்கள் மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிக்காக வழங்கப்பட்டது. தினமும் குடியிருப்பு பகுதிகளில் மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து,
மறுசுழற்சி செய்ய யோசனை தெரிவிக்கப்பட்டது.
மக்கும் குப்பைகளான காய்கறி, பழங்கள், இலைகள், இயற்கையாக மக்கும் குப்பைகளை உரமாக்கி, உரமாக வழங்க வேண்டும். பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகங்கள் போன்ற குப்பைகளை மறுசுழற்சி செய்ய அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது. கலெக்டர் கந்தசாமி, திட்ட இயக்குனர் பிரியா, உதவி இயக்குனர் (பஞ்.,) உமாசங்கர், ஆர்.டி.ஓ., சிந்துஜா, பி.டி.ஓ.,க்கள் அம்புரோஸ், லதா
உட்பட பலர் பங்கேற்றனர்.