/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிரதம மந்திரி திட்டத்தில் விபத்து காப்பீடு வழங்கல்
/
பிரதம மந்திரி திட்டத்தில் விபத்து காப்பீடு வழங்கல்
பிரதம மந்திரி திட்டத்தில் விபத்து காப்பீடு வழங்கல்
பிரதம மந்திரி திட்டத்தில் விபத்து காப்பீடு வழங்கல்
ADDED : செப் 03, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி :பவானி அடுத்த தளவாய்பேட்டை, பெருமாபளையத்தை சேர்ந்தவர் நாராயணன், 66; கடந்த, 2024ல் பவானி ஸ்டேட் வங்கியில், பிரதான மந்திரி சுரக்சா யோஜனா திட்டத்தில், 2 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீட்டில் சேர்ந்தார்.
இதில் ஆண்டுக்கு ஒருமுறை, 20 ரூபாய் பிரீமியம் செலுத்தினால் போதும். இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன் மொபட்டில் மனைவியுடன் சென்றபோது விபத்தில் சிக்கி இருவரும் பலியாகினர். காப்பீடு செய்திருந்த நாராயணனுக்கு, 2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான காசோலையை, பவானி கிளை மேனேஜர் ரஜி, ஊழியர்கள், நாராயணன் வீட்டுக்கு சென்று, அவரது மருமகளிடம் நேற்று வழங்கினர்.