/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரேஷன் கடைகளுக்கு கருவிழி ஸ்கேனர் வழங்கல்
/
ரேஷன் கடைகளுக்கு கருவிழி ஸ்கேனர் வழங்கல்
ADDED : மே 24, 2024 06:43 AM
ஈரோடு : தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்., கருவி மூலம் ஸ்மார்ட் கார்டு ஸ்கேன் செய்து, நுகர்வோர் விரல் ரேகை பதிவு செய்து, பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. பல நேரங்களில் விரல் ரேகை பதிவை கருவி ஏற்காமல், பொருள் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஈரோடு மாவட்டத்தில், 112 ரேஷன் கடைகளுக்கு சோதனை அடிப்படையில், புதிய பி.ஓ.எஸ்., கருவி, கருவிழி ஸ்கேன் கருவி வழங்கினர். தற்போது அனைத்து கடைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், கைவிரல்களில் தேய்வு உள்ளோர், கைவிரல் பதிவு செய்வதில் சிரமம் உள்ளது. இதை தவிர்க்கவும், மாற்று வழியாக கருவிழியை ஸ்கேன் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட் கார்டின் க்யூ.ஆர்.கோடு எளிதில் ஸ்கேன் ஆவதுடன், மின்சாரம் சார்ஜ் ஆகும் வசதி உள்ளது.மாவட்டத்தில், 834 ரேஷன் கடைகளில் ஏற்கனவே, 112 கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. மீதி, 722 கருவிகள் வழங்கும் பணி நேற்று துவங்கியது. இக்கருவி முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, ரேஷன் கடைகளில் பொருள் வாங்க தாமதம் ஏற்படாது.இவ்வாறு கூறினர்.