/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காசநோய் பாதித்தோருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
/
காசநோய் பாதித்தோருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
காசநோய் பாதித்தோருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
காசநோய் பாதித்தோருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
ADDED : ஜூலை 25, 2024 01:19 AM
ஈரோடு: பெருந்துறையில், நலிவடைந்த காசநோய் பாதித்தோருக்கு ஊட்-டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில், காசநோய் பாதித்து, 6 மாத கால சிகிச்சை முடியும் வரை, அரசு மூலம் உதவித்தொகை மாதம்-தோறும், 500 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படு-கிறது.
நக்சய் மித்ரா திட்டத்தில், தொழில் நிறுவனங்கள் மூலம் நலிவடைந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள காசநோயாளிகளுக்கு, சிகிச்சை காலம் முடியும் வரை, 6 மாதத்துக்கு ஊட்டச்-சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. இதன்படி, ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் (காசநோய்) அலுவலகம் மூலம், பெருந்துறை அரசு மருத்துவமனையில் காசநோய் பாதித்து சிகிச்சை பெறும், 35 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் பணியை துவக்-கினர்.பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதன்மை குடிமை மருத்துவர் சாந்தி, நிர்வாகிகள் மணிரத்னம், சுதன்சர்மா, சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.