/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
/
ரூ.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மார் 15, 2024 02:29 AM
ஈரோடு:ஈரோடு
கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, செய்தித்துறை சார்பில் அரசின் சாதனை
விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் மகளிர் குழு உற்பத்தி பொருள்
விற்பனை நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். மேயர்
நாகரத்தினம், டி.ஆர்.ஓ., வசந்தகுமார் முன்னிலை வகித்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு
ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகளை பராமரிப்போருக்கான
உதவித்தொகைக்கான ஆணை, பிற பயனாளிகளுக்கு உதவி என, ௩௫ லட்சம்
ரூபாயில் நலத்திட்ட உதவிகளை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி
வழங்கினார். நிகழ்வில் துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர் பழனிசாமி,
மாநகர செயலாளர் சுப்பிரமணியன், பிரகாஷ், திருவாசகம் உட்பட பலர்
பங்கேற்றனர்.

