/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ்
/
பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ்
ADDED : மே 10, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த, 6ம் தேதி வெளியானது.
தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் மேல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் வேலையில் துரிதமாகி உள்ளனர். இந்நிலையில் பள்ளி கல்வி துறை உத்தரவுப்படி தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: தற்காலிக மதிப்பெண் பட்டியலை அடிப்படையாக கொண்டு கல்லுாரிகளில் சேரலாம். அதேசமயம் இதில் ஏதாவது பிழை இருப்பின் தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்து, பிழையை மாற்றிக் கொள்ளலாம். பள்ளி வேலை நாட்களில் வேலை நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் வந்து மாற்று சான்றிதழ், தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம். இவ்வாறு கூறினர்.