/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'மலைப்பகுதியில் 9 இடங்களில் பி.எஸ்.என்.எல்., 4ஜி டவர்'
/
'மலைப்பகுதியில் 9 இடங்களில் பி.எஸ்.என்.எல்., 4ஜி டவர்'
'மலைப்பகுதியில் 9 இடங்களில் பி.எஸ்.என்.எல்., 4ஜி டவர்'
'மலைப்பகுதியில் 9 இடங்களில் பி.எஸ்.என்.எல்., 4ஜி டவர்'
ADDED : அக் 02, 2024 07:31 AM
ஈரோடு: ''ஈரோடு மாவட்டத்தில், மலைப்பகுதிகளில் ஒன்பது இடங்-களில், பி.எஸ்.என்.எல்., '4ஜி' இணைப்பு டவர் அமைத்து சேவை வழங்குகிறோம்,'' என, பொதுமேலாளர் ஷீவ் சங்கர் சச்சான் கூறினார்.
ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் இருந்து, 25வது நிறுவன நாள் பேரணியை பொது மேலாளர் ஷீவ் சங்கர் சச்சான் கொடியசைத்து துவக்கி வைத்தார். மீனாட்சிசுந்தரம் சாலையில் உள்ள டெலிபோன் பவனில் பேரணி நிறைவடைந்தது. பின் அவர், நிரு-பர்களிடம் கூறியதாவது:
பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தரைவழி, மொபைல் போன், இணைய தள வசதியிலும் குறைந்த கட்ட-ணத்தில், அதிக சேவை வழங்குகிறது. தற்போது தேசிய அளவில், '4ஜி' சேவையை விரைவாக வழங்கி வருகிறது. ஈரோடு பி.எஸ்.என்.எல்., மாவட்டத்தில், நான்கு லட்சம் மொபைல் போன் இணைப்புகள் செயல்படுகிறது. இதில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மோடம் மூலமும், சிம் மூலமும் நேரடியாக இணைப்புகளை பெற்றுள்ளனர். மாவட்ட அளவில், 322 டவர்கள், 672 நவீன கருவிகள் மூலம் முழு அளவிலான இணைய தள வசதியை வழங்குகிறோம். அதில், 72 டவர்களை முழுமையாக, '4ஜி'க்கு மாற்றி உள்ளோம். பிற டவர்களும் மாற்-றப்பட்டு வருகிறது. கடந்தாண்டு டவருடன் இணைந்த, 100 பேட்-டரிகளை புதுப்பித்துள்ளோம். தற்போது, 200 பேட்டரிகளை புதுப்பிக்க உள்ளோம். இதனால் தடையற்ற சேவை பெற முடிகி-றது.வேறு எந்த நிறுவனமும், டவர் இணைப்பு வழங்காத மலைப்ப-குதியான பர்கூரில்-3, கடம்பூர்-குன்றி, கூத்தம்பாளையம், ஈரெட்டி, செங்குளம்-கொங்காடை, மரபெட்டா, உள்ளே-பாளையம், தலமலை என, ஒன்பது இடங்களில் புதிதாக பி.எஸ்.என்.எல்., '4ஜி' இணைப்பு டவர் அமைத்து சேவை வழங்-குகிறோம். அங்கு வேறு எந்த நிறுவன சேவையும் இல்லாததால், முழு அளவில் மக்கள் பி.எஸ்.என்.எல்., மூலம் பயன் பெறுகின்-றனர்.சமீபத்தில் தனியார் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்திய-போது, பி.எஸ்.என்.எல்., இணைப்பில் பலரும் மாறினர். வழக்க-மாக மாதம், 2,000 புதிய சிம்கள் விற்பனையாகும். அந்த மாதம், 10 ஆயிரம் சிம்கள் விற்பனையானது.இவ்வாறு கூறினார். துணை பொது மேலாளர் சாம் குணாளன் உடனிருந்தார்.