/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்டத்தில் வரும் 11ல் பொது வினியோக திட்ட முகாம்
/
ஈரோடு மாவட்டத்தில் வரும் 11ல் பொது வினியோக திட்ட முகாம்
ஈரோடு மாவட்டத்தில் வரும் 11ல் பொது வினியோக திட்ட முகாம்
ஈரோடு மாவட்டத்தில் வரும் 11ல் பொது வினியோக திட்ட முகாம்
ADDED : அக் 09, 2025 12:55 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் வரும், 11ல், 10 தாலுகாவிலும் தலா ஒரு ரேஷன் கடையில் நடக்க உள்ளது.
புதிய ரேஷன் கார்டு கோருதல், நகல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், கைபேசி எண் மாற்றம் செய்தல் போன்ற கோரிக்கை குறித்து மனு வழங்கி தீர்வு பெறலாம்.
இதன்படி தாலுகா வாரியாக ஈரோடு - எலவமலை மூலப்பாளையம் ரேஷன் கடை, பெருந்துறை - முகாசிபிடாரியூர் -2, மொடக்குறிச்சி - முள்ளாம்பரப்பு புதுார், கொடுமுடி - கொல்லன்கோவில் சின்னதாண்டாம்பாளையம், கோபி - புலவக்காளிபாளையம் கள்ளாங்காட்டுவலசு, நம்பியூர் - நம்பியூர் 1, பவானி - ஒலகடம் 1, அந்தியூர் - பட்லுார் நால் ரோடு, சத்தியமங்கலம் - நல்லுார், தாளவாடி - நெய்தாளபுரம் ரேஷன் கடையில் முகாம் நடக்க உள்ளது.