/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
/
பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
ADDED : அக் 16, 2024 12:50 AM
பொது வினியோக
திட்ட குறைதீர் முகாம்
ஈரோடு, அக். 16-
ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் நாள் முகாம் வரும், 19 ல் அனைத்து தாலுகாவிலும் தலா ஒரு ரேஷன் கடையில் நடக்க உள்ளது.
புதிய ரேஷன் அட்டை பெற, நகல் ரேஷன் கார்டு பெற, கார்டில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்வது உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக மனு வழங்கி மக்கள் தீர்வு காணலாம்.
ஈரோடு தாலுகாவுக்கு - சின்னமாரியம்மன் கோவில் வளாக ரேஷன் கடை, பெருந்துறை - வள்ளிபுரத்தான்பாளையம், மொடக்குறிச்சி - அவல்பூந்துறை ராசாம்பாளையம், கொடுமுடி - சோளக்காளிபாளையம், கோபி - கடுக்கம்பாளையம், நம்பியூர் - சாந்திபாளையம், பவானி - சின்னபுலியூர், அந்தியூர் - எண்ணமங்கலம், சத்தியமங்கலம் - அரியப்பம்பாளையம் பெரியூர், தாளவாடி - மல்லங்குழி ரேஷன் கடையிலும் முகாம் நடக்க உள்ளது. முகாமில் அந்தந்த பகுதி பொது வினியோக திட்ட அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.