/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
14ல் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
/
14ல் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
ADDED : டிச 11, 2024 01:23 AM
14ல் பொது வினியோக
திட்ட குறைதீர் முகாம்
ஈரோடு, டிச. 11-
ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் வரும், 14ம் தேதி அனைத்து தாலுகாவிலும் ரேஷன் கடையில் நடக்கிறது. இதில் புதிய ரேஷன் கார்டு பெறுதல், நகல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், மொபைல் எண் இணைத்தல் மற்றும் மாற்றுதல் போன்ற கோரிக்கைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம். இதன்படி ஈரோடு தாலுகா - வில்லரசம்பபட்டி சாணார்பாளையம் ரேஷன் கடை, பெருந்துறை - புங்கம்பாடி, மொடக்குறிச்சி - பூந்துறைசேமூர், கொடுமுடி - இச்சிப்பாளையம், கோபி - அண்ணா நகர் பெருமுகை-2, நம்பியூர் - பொலவபாளையம், பவானி கவுந்தப்பாடி பொம்மன்பட்டி, அந்தியூர் - வெள்ளிதிருப்பூர், சத்தியமங்கலம் - கொமாரபாளையம், தாளவாடிக்கு - பெஜலெட்டி ரேஷன் கடையிலும் முகாம் நடக்கிறது.

