/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
/
பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
ADDED : செப் 12, 2025 01:12 AM
ஈரோடு,: ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் நாள் முகாம், அனைத்து தாலுகாவிலும் நாளை, தலா ஒரு ரேஷன் கடையில் நடக்க உள்ளது. புதிய ரேஷன் கார்டு கோருதல், நகல் அட்டை பெறுதல், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், கைபேசி எண் மாற்றம் செய்தல் போன்ற கோரிக்கைகளுக்காக மனு வழங்கி தீர்வு
காணலாம். தாலுகா வாரியாக, ஈரோடு - பேரோடு, கரட்டுப்பாளையம் ரேஷன் கடை, பெருந்துறை வடமுகம் வெள்ளோடு, மொடக்குறிச்சி - முகாசி அனுமன்பள்ளி, கொடுமுடி - வெங்கம்பூர், கோபி - கணக்கம்பாளையம், நம்பியூர் - குருமந்துார், பவானி - பருவாச்சி, அந்தியூர் - மாத்துார்-1, சத்தியமங்கலம் - கே.என்.பாளையம் சிலிபாளையம், தாளவாடி - சூசைபுரம், மெட்டல்வாடி ரேஷன் கடையில் முகாம் நடக்கிறது.