ADDED : டிச 14, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்., சார்பில் மக்கள் சந்திப்பு
ஈரோடு, டிச. 14-
ஈரோடு தெற்கு மாவட்ட காங்., சார்பில் 'உங்கள் இல்லம் தேடி நாங்கள்' என்ற பெயரில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஐந்தாம் நாள் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமையில் மொடக்குறிச்சி பகுதியில் நேற்று நடந்தது. இதில், 46புதுார், லக்காபுரம், ஊத்துக்குளி, பூந்துறை சேமூர், கனகபுரம், முத்துகவுண்டம்பாளையம், கஸ்பாபேட்டை வழியாக மொடக்குறிச்சியை அடைந்தனர். மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதித்து, மனுக்களை பெற்றனர்.

