sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பள்ளி அருகேயுள்ள காலியிடத்தை பட்டா போட பொதுமக்கள் எதிர்ப்பு

/

பள்ளி அருகேயுள்ள காலியிடத்தை பட்டா போட பொதுமக்கள் எதிர்ப்பு

பள்ளி அருகேயுள்ள காலியிடத்தை பட்டா போட பொதுமக்கள் எதிர்ப்பு

பள்ளி அருகேயுள்ள காலியிடத்தை பட்டா போட பொதுமக்கள் எதிர்ப்பு


ADDED : அக் 26, 2024 08:11 AM

Google News

ADDED : அக் 26, 2024 08:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட காளிபாளையம் கிழக்கு தெருவில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளி அருகில் உள்ள பொதுக் கழிப்பறையும், அதை ஒட்டி காலி இடமும் உள்ளது.

இந்த காலி இடத்தை டவுன் பஞ்., சார்பில் ஜே.சி.பி., இயந்-திரம் மூலம் நேற்று சுத்தம் செய்தனர். இதுகு-றித்து மக்கள் விசாரிக்கையில், அந்த இடத்தில் மக்களுக்கு பட்டா வழங்குவதாகவும், அதற்காக நிலத்தை சுத்தம் செய்யும் பணி நடப்பதும் தெரிந்-தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஜே.சி.பி., இயந்திரத்தை சிறைபிடித்தனர். டவுன் பஞ்., செயல் அலுவலர் நாகராஜ் மற்றும் அதிகா-ரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 'பள்ளியை தரம் உயர்த்தும்போது, காலி இடத்தை பள்ளிக்கு மைதானமாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே அந்த இடத்தை பட்டாவாக வழங்க கூடாது' என்று மக்கள் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியதால், தாராபுரம்-கரூர் சாலையில், மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்-பட்டது. தாராபுரம் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் பேச்-சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வைத்தார்.






      Dinamalar
      Follow us