/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குழந்தை கடத்தப்படுவதாக வதந்தி காரை சேதப்படுத்திய பொது மக்கள்
/
குழந்தை கடத்தப்படுவதாக வதந்தி காரை சேதப்படுத்திய பொது மக்கள்
குழந்தை கடத்தப்படுவதாக வதந்தி காரை சேதப்படுத்திய பொது மக்கள்
குழந்தை கடத்தப்படுவதாக வதந்தி காரை சேதப்படுத்திய பொது மக்கள்
ADDED : டிச 25, 2025 04:59 AM
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, குழந்தை கடத்தப்பட்டதாக வதந்தி பர-வியதால், -பொது மக்கள் காரை சேதப்படுத்தினர்.
நீலகிரி மாவட்டம், சோலுார் மட்டத்தை சேர்ந்த காதலர்கள் மணிகண்டன், 28, மகேஸ்வரி, 20. இருவரும் மூன்று மாதங்க-ளுக்கு முன்பு, திருமணம் செய்து கொள்ள இருப்பதால். பாது-காப்பு கொடுக்குமாறு சோலுார்மட்டம் போலீசாரிடம் புகார் கொடுத்திருந்தனர். அதன்படி போலீசார் இருதரப்பு பெற்றோ-ரையும் விசாரித்தனர். அதில் மணிகண்டன் வேண்டாம் என கூறி, மகேஸ்வரி பெற்றோருடன் சென்று விட்டார்.இந்நிலையில் ஈரோடு மாவட்டம், தாளவாடியில் பாளையம் என்ற ஊரில் மகேஸ்வரியின் அத்தை விவசாயம் செய்து வரு-வதால் அவர் அங்கிருந்துள்ளார். நேற்று காலை மீண்டும் தாளவா-டியில் இருந்து தெங்குமரஹாடா செல்வதற்காக, மகேஸ்வரி தன் தந்தையுடன் வரும் தகவலை போன் மூலம் காதலர் மணிகண்ட-னுக்கு தெரிவித்துள்ளார். மணிகண்டன், அவருடைய அக்கா மகன் பிரசாத்துடன் ஹூண்டாய் காரில் வந்து, பண்ணாரியில் காத்-திருந்தார்.
அப்போது, தாளவாடியில் இருந்து வந்த மகேஸ்வரி, மணிகண்-டனின் காரில் ஏறி செல்ல முற்படும்போது, அவருடைய தந்தை குழந்தையை கடத்தி செல்கிறார்கள் என கூச்சலிட, பொதுமக்கள் காரை தொடர்ந்து, 40, கி.மீ., துரத்தி சென்று புதுக்குய்யனுார் பிரிவு அருகே காரை கற்களால் அடித்தனர். பிறகு கார் மரத்தின் மீது மோதி நிறுத்தப்பட்டது. சத்தியமங்கலம் போலீசார், காத-லர்கள் இருவரையும் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.

