/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆயுதப்படை போலீசார் 15 பேர் இடமாற்றம்
/
ஆயுதப்படை போலீசார் 15 பேர் இடமாற்றம்
ADDED : டிச 25, 2025 04:59 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட போலீஸ் ஆயுதப்படையில் பணியாற்றிய, 15 பேர் சட்டம் ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்-களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு போலீஸ் ஆயுதப்படையில் போலீசாக, 2016 முதல் பணியாற்றி வருவோரிடம் சட்டம் ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்ற விருப்பமனு பெறப்பட்டது. இதில், 15 பேர் விருப்பம் தெரிவித்து இருந்தனர். இவர்களை ஈரோடு எஸ்.பி.,சுஜாதா நேற்று முன்தினம் பணியிட மாற்றம் செய்து உத்த-ரவிட்டார். பணியிட மாறுதலாகி செல்லும் போலீசார், ஆயுதப்ப-டையில் ஒப்படைக்க வேண்டிய பொருட்களை முறையாக ஒப்ப-டைக்க வேண்டும். மேலும் ஆயுதப்படை வளாகத்தில் குடியி-ருக்கும் பட்சத்தில் வீட்டை காலி செய்து கொடுக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

