/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எல்லை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு
/
எல்லை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு
ADDED : பிப் 21, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
நக்கீரர் வீதியில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர், பாலமுருகன்,
புது எல்லைமாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு விழா பூச்சாட்டுதலுடன்
நேற்று தொடங்கியது. இன்று காலை கோவிலில் கொடி ஏற்றப்படுகிறது. 29-ம்
தேதி இரவு, அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வருகிறது.
மார்ச்,
1-ம் தேதி அதிகாலை, பக்தர்கள் காரைவாய்க்கால் சென்று தீர்த்தம்,
பால்குடம், அக்னி சட்டி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து
நேர்த்திக்கடன் செலுத்துவர். 2-ம் தேதி இரவு அம்மன் காய்கனி அலங்காரம்
செய்யப்படும். 4-ம் தேதி இரவு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

