/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிவன்மலை ஊராட்சியில் வளர்ச்சி பணிகளுக்கு பூஜை
/
சிவன்மலை ஊராட்சியில் வளர்ச்சி பணிகளுக்கு பூஜை
ADDED : அக் 18, 2024 03:03 AM
சிவன்மலை ஊராட்சியில் வளர்ச்சி பணிகளுக்கு பூஜை
காங்கேயம், அக். 18-
காங்கேயம் யூனியன் சிவன்மலை ஊராட்சியில், வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூஜை, சிவன்மலை கோவில் அடிவாரத்தில் நேற்று நடந்தது. காங்கேயம் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் சிவானந்தன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் துரைசாமி முன்னிலை வகித்தார். காங்கேயம் சாலை முதல் நீலக்காட்டுபுதூர் விநாயகர் கோவில் வரை சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்தல், சரவணா நகர், ராமப்பட்டணம், ஆனைக்குழிமேடு குடியிருப்பில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்துதல், பொன்னிய கவுண்டன்புதுார் ஆதிதிராவிடர் காலனியில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் என, 59.99 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணி தொடங்கி வைக்கப்பட்டது.