ADDED : நவ 15, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மார்பிள் கற்களுக்கு பூஜை
புன்செய் புளியம்பட்டி, நவ. 15-
புன்செய் புளியம்பட்டி அருகே அண்ணாநகரில், தென் சீரடி சக்தி சாய்ராம் தர்மஸ்தலா கோவில் உள்ளது. இங்கு அயோத்தி ராமர் கோவில் வடிவில் சிற்ப வேலைப்பாடுகளுடன், சீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட உள்ளது. அயோத்தி ராமர் கோவிலை கட்டிய ஸ்தபதிகள், இங்கு கட்டுமான பணி மேற்கொள்கின்றனர். ராஜஸ்தானில் இருந்து சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பிங்க் மார்பிள் கற்கள் வரவழைக்கப்ட்டன. தயானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் கர்ப்பகிரகத்தில் அமையவுள்ள மார்பிள் கற்களை, ஹோம குண்டம் முன் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.